42
மருதமுனை கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்ட மருதமுனை வெற்றிக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேன் அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சம்பியனானது. மொத்தம் 21 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை (16) நடைபெற்றது. இதில் அஸ்னல் அணியை எதிர்கொண்ட பிரிஸ்பேன் அணி நிர்ணயிக்கப்பட்ட 56 ஓட்ட வெற்றி இலக்கை 4 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இதில் சஸ்னி, அல்ஜர்ப், ஹனான் ஆகியோர் ஆட்டநாயகன் விருதை வென்றனர்.
பெரியநீலாவணை விசேட நிருபர்