முழங்கை காயத்தில் இருந்து மீண்டிருக்கும் தென்னாபிரிக்க டெஸ்ட் அணித் தலைவர் டெம்பா பவுமா இலங்கைக்கு எதிரான டெஸ்;ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களத்தடுப்பின்போது உபாதைக்கு உள்ளானது தொடக்கம் பவுமா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென்னாபிரிக்க அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் மார்கோ ஜேன்சன் மற்றும் ரொல்ட் கோட்சீ ஆகியோரும் தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் ககிசோ ரபாடாவுடன் டேன் பீட்டர்சன் மற்றும் வியான் முல்டர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். கேஷவ் மஹராஜ் மற்றும் செனுரன் முத்துசாமி சுழற்பந்து வீச்சாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்க டெஸ்ட் குழாம்: டெம்பா பவுமா (தலைவர்), டேவிட் பெடிங்கம், கெரால்ட் கொட்சீ, டோனி டி சொர்சி, மார்கோ ஜேன்சன், கேஷவ் மஹராஜ், எய்டன் மாக்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டான் பீட்டர்சன், ககிசோ ரபாடா, ட்ஸ்டான் ஸ்டப்ஸ், ரியா ரிக்கல்டன், கைல் வெரைன்.