Sunday, November 24, 2024
Home » நிந்தவூரில் தேசியப்பட்டியல் எம்.பி அபூபக்கர் ஆதம்பாவாவுக்கு வரவேற்பு

நிந்தவூரில் தேசியப்பட்டியல் எம்.பி அபூபக்கர் ஆதம்பாவாவுக்கு வரவேற்பு

by mahesh
November 20, 2024 12:10 pm 0 comment

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவானதையொட்டி அவருக்கான வரவேற்பு ஞாயிற்றுக்கிழமை (17) இரவு நிந்தவூர் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் நிந்தவூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்த கட்சியின் நிந்தவூர் செயற்பாட்டாளர்கள் மற்றும் இப்பிராந்திய பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஏனையோர்களையும் இணைத்து நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா தனது வரவேற்பின் போது தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இடம்பிடித்த ஒரேயொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT