பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(19) முள்ளிவாய்க்காலிலுள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்குச் சென்று மலர்தூவி, அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நேற்று (19) முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்குச் சென்று, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அரசியல் உறுப்பினர்கள் அனைவருமாக சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த அஞ்சலியின்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஓமந்தை விஷேட நிருபர்