IDM நேஷன் கெம்பஸானது, இங்கிலாந்தின் சௌத்எம்டன் நகரில் அமைந்துள்ள ஷொலன்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலங்கையில் உள்ள மாணவர்களின் உயர் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான கருத்தரங்கொன்று இலங்கை மன்றக் கல்லூரியில் IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் தலைவர் கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகனின் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இலங்கையில் க.பொ.த. சாதாரண தர, உயர்தர கல்வியை நிறைவுசெய்த மாணவர்கள் இங்கிலாந்தின் சௌத்எம்டன் ஷொலன்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்களை முன்னெடுப்பது குறித்தும் அங்குள்ள கற்கை நெறிகள் குறித்தும் இங்கிலாந்தின் சௌத்எம்டன் ஷெலன்ட் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் சிரேஷ்ட சர்வதேச அதிகாரி நேஹா ஹொல்கர் சௌதாரி தெளிவுபடுத்தினார். இதன்போது மாணவர்கள் கற்கைநெறிகள் தொடர்பான கேள்விகளை எழுப்பி நேரடியான புரிதல்களை பெற்றுக்கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் IDM நேஷன் கெம்பஸின் இன்டர்நெஷனலின் பணிப்பாளர் அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்ணாண்டோ, வட பிராந்திய பணிப்பாளர் அன்றுா அனஸ்லி, முகாமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.