இலங்கையின் முதலாவது தனியார் காப்புறுதி சேவை வழங்குநர் எனும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் தேசத்தின் சமூக-பொருளாதாரக் கட்டமைப்பில் நான்கு தசாப்த காலமாக பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது. இந்தப் பயணத்தில், சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் நாம் தொடர்ச்சியாக வலிமையின் அரணாக எம் மக்களுடன் திகழ்ந்து வருவதுடன், அவர்களின் மைல்கல் சாதனைகளின் கொண்டாட்டங்களிலும் அருகில் உள்ளோம். எமது மூலோபாய வழிகாட்டல் என்பது எப்போதும் தெளிவானதாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், விநியோகத்தர்கள் மற்றும் பங்காளர்களுக்கு நீடித்து நிலைத்திருக்கும் பெறுமதியை ஏற்படுத்துவதாகும்.
உலகம் முன்னேறுகையில், எமது பங்காளர்களின் தேவைகளும் அதிகரிக்கின்றன. எதிர்காலத்துக்கான தெளிவான நோக்குடன், ஆயுள் காப்புறுதியின் பங்கை மாற்றியமைப்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த நோக்கத்துடன் ஒன்றிணைத்து, எமது புதிய வர்த்தக நாம நோக்கத்தை அறிமுகம் செய்துள்ளோம். முக்கியமானதை பாதுகாப்பதனூடாக, மனித முன்னேற்றத்துக்கு வலுவூட்டல் என்பது அதுவாக அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண நோக்கம் மட்டுமாக அமைந்திராமல், செயற்பாட்டுக்கான அழைப்பாக அமைந்துள்ளது. எமது வர்த்தக நாம நோக்கத்தை செயற்படுவதற்கு நான்கு நிலை வழிமுறையை முன்னெடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்:
முதல் படியாக ‘அறியப்படாததை தொகுப்பிடல்’– எமது வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை புரிந்து கொள்வதற்காக சந்தை உள்ளம்சங்களை ஆழமாக ஆராய்வது. இன்று, பெருமளவான மக்கள் தமது வாழ்க்கை தொடர்பில் பரிபூரணமாக கவனம் செலுத்துகின்றனர். வெறுமனே நிதிசார் பாதுகாப்பு மாத்திரம் முக்கியத்துவம் வழங்காமல், உளசார் மற்றும் உடல்சார் நலனிலும் அக்கறை கொண்டுள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு, மூன்று பிரதான அரண்களை வலிமைப்படுத்துவதனூடாக பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்க நாம் முயற்சிக்கின்றோம்.