Sunday, November 24, 2024
Home » 2024 மூன்றாம் காலாண்டு நிறைவில் யூனியன் வங்கி கடன்கள் மற்றும் முற்பண வழங்கல் பிரிவில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்தது

2024 மூன்றாம் காலாண்டு நிறைவில் யூனியன் வங்கி கடன்கள் மற்றும் முற்பண வழங்கல் பிரிவில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்தது

by Gayan Abeykoon
November 20, 2024 1:00 am 0 comment

2024 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த 9 மாத காலப்பகுதிக்கான நிதிசார் வினைத்திறனை யூனியன் வங்கி அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், சவால்கள் நிறைந்த சந்தைச் சூழலை கடந்து வரும் நிலையில், பிரதான பிரிவுகளில் குறிப்பிடத்தக்களவு மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை வங்கி வெளிப்படுத்தியுள்ளது.

சந்தை வட்டி வீதங்களில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறுகிய எல்லைப் பெறுமதிகளுக்கு முகங்கொடுத்த போதிலும், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் சிறந்த மைல்கல்லை யூனியன் வங்கி எய்தியிருந்தது. வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவில் வங்கி 22% எனும் உயர்ந்த அதிகரிப்பை வங்கி பதிவு செய்து, ரூ. 75,744 மில்லியனை எய்தியிருந்தது. மேலதிகமாக, வைப்புகள் உறுதியான 9% வளர்ச்சியை எய்தி ரூ. 96.328 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக வாடிக்கையாளர் இருப்பை விரிவாக்கம் செய்வதற்கான வங்கியின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

மொத்த சொத்துக்களின் பெறுமதி 2% இனால் அதிகரித்து ரூ. 142,474 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக, வங்கியின் உறுதியான நிதிசார் நிலை பிரதிபலிக்கப்பட்டிருந்தது. மொத்த மூலதன போதுமை விகிதம் உறுதியானதாக பதிவாகியிருந்ததுடன், ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு மேலானதாக காணப்பட்டதுடன், யூனியன் வங்கியின் உறுதித் தன்மை மற்றும் நிதிசார் சுகாதாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தது.

வங்கியின் மொத்த நிகர வருமானம் 29% இனால் குறைந்து ரூ. 12,324 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய வருமானம் 26% இனால் குறைந்து ரூ. 3,573 மில்லியனாக பதிவாகியிருந்தது. தொழிற்பாடு சார் வினைத்திறனில் கவனம் செலுத்துவதற்கு வங்கிக்கு இந்த சவால்கள் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தன. மொத்த தொழிற்பாட்டு செலவுகள் 5% இனால் மாத்திரம் அதிகரித்து ரூ. 4,032 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக வங்கியினால் முன்னெடுக்கப்படும் வினைத்திறனான செலவு நிர்வாக மூலோபாயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

நிறைவடைந்த 9 மாத காலப்பகுதிக்கான வரிக்கு முந்திய இலாபம் ரூ. 358 மில்லியனாகும். வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 117 மில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் செயற்பாடுகளும் இதே போக்கை வெளிப்படுத்தியிருந்ததுடன், வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 111 மில்லியனாக பதிவாகியிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT