இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கமைய கோணகல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுடன் கோட்டை வேல்ல வீதி பகுதியில் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 264 பொதிகளுடன் (52,800 சிகரெட்டுகள்) சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதன் பெறுமதி சுமார் ரூ. 5,000,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 41 வயதுடைய நபர் ஒருவரும், கொழும்பு 12, பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வாழைத்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.