Sunday, November 24, 2024
Home » ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவர்கள்

ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவர்கள்

- பாராளுமன்ற வரலாறு குறித்து தெளிவூட்டல்

by Prashahini
November 20, 2024 12:16 pm 0 comment

– பெறுமதியான மரக் கன்றுகளும் நினைவுப் பரிசாக வழங்கி வைப்பு
இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள், ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக நேற்று (19) வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆகியன இணைந்து செயற்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றை பார்வையிடுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த மாணவர்களுக்கு பாராளுமன்ற வரலாறு குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதனை முன்னிட்டு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களும், மாணவர்களும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கு நினைவுப் பரிசுகளை வழங்கி வைத்ததுடன், ஜனாதிபதி செயலகத்தினால் அந்தந்த பாடசாலைகளில் நடுவதற்கு பெறுமதியான மரக் கன்றுகளும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் பாடசாலை மாணவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அலுவலக பணிப்பாளர் நாயகம் (சட்டம்) சட்டத்தரணி ஜே. எம். பண்டாரவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT