Sunday, November 24, 2024
Home » ஏ.ஆர். ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து

ஏ.ஆர். ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து

- X இல் பதிவிட்டு Hashtag போட்ட ரஹ்மான்

by Prashahini
November 20, 2024 11:50 am 0 comment

– சுமார் 30 வருட திருமண உறவு முறிவு
ஏ.ஆர். ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று (19) இரவு அறிவித்தார். இந்த நிலையில், சில மணிநேரத்திலேயே ஏ.ஆர். ரஹ்மானும் அதனை உறுதி செய்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான், தனது X பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி’’ என்று குறிப்பிட்டு #ArrSairaaBreakup எனவும் பதிவிட்டுள்ளார்.

சாய்ரா தரப்பிலிருந்து வழக்குரைஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாய்ரா தெரிவித்திருப்பதாவது, “எங்களுடைய உறவில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவருக்குமிடையேயான காதலைக் கடந்தும், இருவருக்குமிடையே பிரிவும் விரிசலும் ஏற்பட்டுள்ளதாக” அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மிகுந்த வேதனையுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், சவாலான இந்த தருணத்தில், பொதுமக்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்கையை புரிந்துகொண்டு மதிப்பளிக்கவும்” என சாய்ரா பானு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்மூலம், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியின் கடந்த 29 ஆண்டுகால திருமண உறவு முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹீமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT