60
தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேர், மாதிவெல குடியிருப்பிலிருந்து வெளியேறியதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.இந்நிலையில், இன்னும் 80 பேர் வெளியேறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாதிவெல குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு முன்னாள் எம்.பிக்களுக்கு ஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும்,பொதுத் தேர்தல் நடைபெறும் வரை இவ்வீடுகளில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இப்போது, புதிய எம்.பிக்களுக்கு இவ்வீடுகளை வழங்க வேண்டியிருப்பதால், இவற்றை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.