ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனங்களை, பகிர்ந்தளிப்பதில் பெரும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில்,ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், டலஸ் அலகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும், எரான் விக்கிரமரட்ண, மனோ கணேசன் மற்றும் பலரையும் தேசியப் பட்டியல் ஆசனங்களில் உள்வாங்குமாறு மற்றொரு குழுவினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 05 தேசியப் பட்டியல் ஆசனங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முரண்பாடுகள் முற்றியுள்ள நிலையில்,
இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் நேற்றும் நடைபெற்றது.