யாழ்ப்பாணம், திக்கம் வடிசாலையில் கடந்த பத்து வருடங்களாக இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் சகலதும் விசாரிக்கப்படுமென, பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார். வவுனியாவுக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அவர் நகரப் பகுதியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் கீழுள்ள கற்பகம் பனை உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தை பார்வையிட்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:
யாழ். திக்கம் வடிசாலையில் கடந்த பத்து வருடங்களாக இடம்பெற்ற மோசடிகள் பற்றி விசாரிக்கப்படும். முன்னாள் அமைச்சர் ஒருவர், இங்கு பணிபுரிந்த களஞ்சியசாலை காப்பாளரை துப்பாக்கி முனையில் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
தலைவராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் 2,500 ரூபாவும் மற்றும் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் குழுக்களில் கலந்துகொள்வதற்கு 2,500 ரூபாவும் உதவித் தொகையாக வழங்கப்படும்.
தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், அது சூத்திரத்தின்படி கணக்கிடப்படுவதாகவும் அவர், தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், பாராளுமன்றத்திலிருந்து 40 கிலோ மீற்றருக்குக்குள் வீடு இல்லாதவர்கள், மாதிவெலயில் அமைந்துள்ள குடியிருப்புக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
மாதிவெலயில் இவ்வாறான 108 வீடுகள் இருப்பதாகவும், கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வரிசையில்,ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
வீட்டு வாடகையாக 2,000 ரூபா செலுத்தப்படுமென்றும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டுமென்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுத் தொகையை குறைக்க பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு இணைந்து வசதியளித்துள்ளதாக தெரிவித்த செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான கொடுப்பனவுகளையும் அமைச்சு ஏற்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வவுனியா விசேட நிருபர்