ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில் விவாதம் செய்து வருகின்றனர்.
நயன்தாராவின் காட்டமான அறிக்கையை தொடர்ந்து, தனுஷ் தரப்பின் விளக்கத்திற்காக அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
2015ஆம் ஆண்டு வெளியாகிய நானும் ரவுடி தான் திரைப்படம் தனுஷிற்கு வெற்றிகரமான தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றுக் கொடுத்ததது.
நானும் ரவுடி தான் படம் உருவான சமயத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்து சுமார் 7 ஆண்டுகளின் பின்னர் இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது.
இந்நிலையில் இவர்களின் திருமண காணொளியை Netflix நிறுவனம் தயாரித்துள்ளது.
இதற்காக ‘நானும் ரவுடி தான்’ படத்துடன் தொடர்புடைய காட்சிகளையும், பாடல்களையும் பயன்படுத்த நயன் – விக்கி தரப்பு முடிவு செய்தது.
இந்நிலையில் Netflix ஆவணப்படத்தில் நானும் ரௌவுடிதான் திரைப்படத்தின் காட்சிகள் சில உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் தன்னிடம் உத்தியோகபூர்வமான உரிமத்தை நயன்தாரா தரப்பு பெறத் தவறியுள்ளதாக தனுஷ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆவணப்படத்தை வெளியிடுவதற்கு முன்பு, உரிமம் தொடர்பில் தனுஷ் தரப்பிலிருந்து பதில் கோரிய போதிலும் அதற்கு கடந்த 2 வருடங்களாக எவ்வித பதிலும் வழங்கப்படவில்லையென நயன்தாரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆவணப்படத்தை நயன்தாரா தனது பிறந்தநாளான எதிர்வரும் 18ஆம் திகதி வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்ததுடன், அதற்கான முன்னோட்டமும் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.
இதனிடையே நயன்தாராவின் ஆவணப்படம் தொடர்பான காணொளியில் 3 வினாடி காட்சிக்கு சுமார் ரூ.10 கோடி தனுஷ் தரப்பில் இருந்து கேட்கப்பட்டதாக தெரிவித்து, அதற்கு எதிராக நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா பகிர்ந்துள்ள இந்த அறிக்கை தொடர்பில் இணையத்தில் பல விவாதங்கள் நடந்து வருகிறன.
இதனைத் தொடர்ந்து நடிகைகளான நஸ்ரியா நசீம், ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரும் நயன்தாராவின் பதிவினை லைக் செய்துள்ளனர்.
இவர்கள் அனைவருமே தனுஷ் உடன் இணைந்து நடித்தவர்கள். இவர்கள் தற்போது நயன்தாராவுக்கு ஆதரவாகவும், தனுஷ் இற்கு எதிராகவும் தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.