மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரை 3–0 என கைப்பற்றியது.
செயின்ட் லூசியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 37 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தபோதும் மத்திய வரிசையில் வந்த அணித் தலைவர் ரோவ்மான் பெவல் 41 பந்துகளில் 54 ஓட்டங்களை விளாசினார்.
அவர் 6 ஆவது விக்கெட்டுக்கு ரொமாரியோ செபார்ட்டுடன் (30) சேர்ந்து 73 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். இதற்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு மத்திய வரிசையில் சாம் கரன் 26 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்றதோடு மூன்று பிடியெடுப்புகளில் இருந்து தப்பிய லியாம் லிவிங்ஸ்டன் 28 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்தனர்.
இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை (17) இதே செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது.