பல் விஞ்ஞான வளர்ச்சியின் அம்சங்கள் மற்றும் தொன்று தொட்டு தொடரும் உப்பின் நன்மைகளை உள்ளடக்கிய Clogard Natural Salt, பல் ஈறுகள் மற்றும் பற்களை பராமரிப்பதில் புரட்சியை ஏற்படுத்துகிறது. பல் ஈறு தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், 5 சிறுவர்களில் ஒருவர், ஈறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக அறியப்படுகின்றது. இந்த ஆபத்தான போக்கு காணப்படுகின்ற போதிலும், நுகர்வோர் தமது அன்றாட நடைமுறைகளில் ஈறு ஆரோக்கியம் தொடர்பில் பெரும்பாலும் கவனிப்பதில்லை. ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் வலுவான பற்களை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட Clogard Natural Salt ஆனது, தினசரி வாய்ச் சுகாதார பராமரிப்பிற்காக பயனுள்ள மற்றும் இயற்கையான தீர்வை வழங்க உப்பு கொண்டுள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்புகளைப் பயன்படுத்துகிறது.
வலுவான பற்கள் மற்றும் முழுமையான வாய்ச் சுகாதாரத்திற்கு ஆரோக்கியமான பல் ஈறுகள் அவசியமாகும். அவை இன்றி, நோய்த் தொற்றுகள், பற் சிதைவு மற்றும் பல் விழுதல் ஆகிய பிரச்சினைகளால் நம் பற்கள் பாதிக்கப்படக்கூடும். பல் ஈறு தொடர்பான சிக்கல்களால், பற்களை பலப்படுத்தும் கட்டமைப்புகள் சேதப்படுத்தப்படுகின்றன. மோசமான வாய்ச் சுகாதாரம், புகைப்பிடித்தல், ஹோமோனின் ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட சில பிரச்சினைகள் அல்லது மருந்துப் பயன்பாடுகள் இந்த நிலைமைகளுக்கான பொதுவான காரணங்களாகக் காணப்படுகின்றன. ஈறுகள் சிவப்பாதல், வீங்குதல் முதல் வாய்த் துர்நாற்றம் மற்றும் அதன் உச்ச கட்டமான ஆட்டமுறும் பற்கள் வரை இதன் அறிகுறிகள் அமைகின்றன. ஆரம்ப ஈறு பிரச்சினையை உரிய வகையில் அவதானித்து பராமரித்து பேணுவதன் மூலம் அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் இரண்டாம் நிலை ஈறு பிரச்சினைகளுக்கு சிகிச்சை வழங்கப்படாவிட்டால், அது கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
Hemas Consumer Brands இன் வகைப்படுத்தல் முகாமையாளர் மேதாவி ஜயரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில், “ஈறுகள் ஆரோக்கியமான வாய்க்கு முக்கிய அடித்தளமாகும். அதற்கு சரியான பராமரிப்பு முன்னெடுக்கப்படாவிட்டால், பல் விழுதல் மட்டுமல்லாமல், ஏனைய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகின்றன. Clogard Natural Salt போன்ற தயாரிப்புகள் ஈறுகளைப் பாதுகாப்பதிலும் நீண்ட கால வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும் அவசியமாகும்.” என்றார்.
பற்களை வலுவாக வைத்திருப்பதில் பல் ஈறின் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான ஈறுகள் பற்களை பற்றிப் பிடித்திருக்கும் அத்திவாரமாக செயற்படும் அதே நேரத்தில், தீங்கு விளைவிக்கும் பக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
ஈறு தொடர்பான பிரச்சினைகள் பெரிதாகும் போது, அவை இந்த ஆதரவை வழங்குவதிலிருந்து பலவீனமடைந்து, இறுதியில் பல் விழுவதற்கு வழிவகுக்கும். எனவே ஈறின் ஆரோக்கியத்தை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது.