டோக்கியோ சீமெந்து குழுமம், திருகோணமலையில் ஏ.வை.எஸ்.ஞானம் விலேஜ் ஹார்ட்பீட் எம்பவர்மன்ட் (VHE) (கிராமிய இதயத்துடிப்பு வலுவூட்டல்) நிலையத்தின் இரண்டாம் கட்டத்தை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்திருந்தது. 2023 ஆம் ஆண்டில் Foundation of Goodness (FOG) உடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையத்தின் விஸ்தரிக்கப்பட்ட தொகுதியை, டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பணிப்பாளர்களான மனோ சேகரம் மற்றும் அவெரில் லுடோவைக் ஆகியோருடன், FOG இன் ஸ்தாபகரும் பிரதம காப்பாளருமான குஷில் குணசேகர ஆகியோர் திறந்து வைத்தனர். டோக்கியோ சீமெந்து கம்பனியின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிலையத்தின் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில் விரிவாக்கல் திட்டத்தை டோக்கியோ சீமெந்து குழுமம் ஆரம்பித்ததுடன், சமூகத்திடமிருந்து கிடைத்திருந்த கேள்வியின் பிரகாரம் தொழிற்பயிற்சி திட்டங்களை இந்த நிலையம் வழங்கிய வண்ணமுள்ளது. VHE நிலையத்தில் வகுப்பறைகள் மற்றும் சகல வசதிகளையும் கொண்ட கேட்போர்கூடம் அடங்கலாக பன்-பாவனை பகுதிகளினூடாக, அதிகளவான மாணவர்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் தொழில்களில் ஒரே நேரத்தில் கல்வி மற்றும் திறன் விருத்திக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.