இலங்கையின் முன்னணி மின்-வர்த்தக (e-commerce) தளமான Daraz, “ஆண்டின் மிகப் பாரிய விற்பனை நிகழ்வு” (Biggest Sale of the Year) என அறியப்படுகின்ற தனது வருடாந்த 11.11 கொள்வனவுக் கொண்டாட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இந்நிகழ்வானது நவம்பர் 17 வரை இடம்பெறவுள்ளது. இந்த ஆண்டு 11.11 விற்பனை நிகழ்வானது மிகச் சிறந்த தள்ளுபடிகள் மற்றும் பிரத்தியேக சலுகைகளை வழங்கி, இந்த ஆண்டில் மிகக் குறைந்த விலைகளில் பல்வேறுபட்ட பொருட்களை இலங்கை மக்களுக்கு வழங்குகின்றது. இதை விட, ரூபா 150 மில்லியன் பெறுமதி கொண்ட வவுச்சர்களும் கிடைக்கப்பெறுவதுடன், பெருந்தொகையை சேமிக்க விரும்புகின்ற எவரும் கட்டாயமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய விற்பனை நிகழ்வாக மாறியுள்ளது.
இலத்திரனியல் சாதனங்கள், நவநாகரிகம், சுகாதாரம் மற்றும் அழகு பராமரிப்பு, மற்றும் விரைவாக விற்பனையாகின்ற நுகர்வோர் பொருட்கள் போன்ற பிரபலமான பிரிவுகள் மத்தியில் பல மில்லியன் கணக்கான பொருட்களுக்கு 90% வரையான பாரிய தள்ளுபடிகளை Daraz இந்த ஆண்டில் வழங்குகின்றது. இந்த விற்பனைக் கொண்டாட்டத்தில் Fonterra, Mead Johnson Nutrition, Unilever, Diamond Best Foods, Cetaphil, Marvel, Baseus, DIMO Retail, Mobil, Celcius, GSK, Janet, Promate, Reckitt போன்ற பிரபல வர்த்தகநாமங்கள் அடங்கலாக, பல்வேறு தயாரிப்புக்கள் கிடைக்கப்பெறுவதுடன், கொள்வனவுகளை மேற்கொள்கின்ற அனைவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கின்றது. அன்றாட அத்தியாவசிய பாவனைப் பொருட்கள் முதல் விலையுயர்ந்த இலத்திரனியல் சாதனங்கள் வரை அனைத்துப் பிரிவுகளிலும் வியத்தகு மதிப்பிலான சேமிப்புக்களை வாடிக்கையாளர் எதிர்பார்க்க முடியும்.
கொள்வனவு அனுபவத்தை இன்னும் சிறப்பிக்கும் வகையில், ஒட்டுமொத்த தளத்திலும் இலவச விநியோக சேவை, கொமர்ஷல் வங்கி, DFCC வங்கி, HSBC, யூனியன் வங்கி, மக்கள் வங்கி, நேஷன்ஸ் டிரஸ்ட் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், Frimi, Genie, ஹட்டன் நஷனல் வங்கி, இலங்கை வங்கி, LOLC Finance, பான் ஏசியா வங்கி மற்றும் NDB வங்கி உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கொடுப்பனவுக் கூட்டாளர்களின் கூட்டாண்மையுடன் 20% வரையான கூடுதல் தள்ளுபடிகள் போன்ற விசேட சலுகைகளையும் Daraz அறிமுகப்படுத்தியுள்ளது.