தமக்கென இல்லமொன்றை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கனவினைச் சுமப்பவர்களுக்கு, கம்பஹாவில் “The Palace” என்ற ஆடம்பர அடுக்குமனையை சொந்தமாக்கிக் கொள்வதற்கான தனித்துவமான வாய்ப்பொன்றினை வழங்கும் வகையில் DFCC வங்கி மற்றும் Prime Land Residencies PLC ஆகியன தமக்கிடையில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளன. சொந்த இல்லம் என்ற கனவை அனைவருக்கும் நனவாக்கிக் கொள்ளச் செய்வதில் DFCC வங்கியின் குறிக்கோளுக்கு சான்றாக இக்கூட்டாண்மை அமைந்துள்ளது. DFCC வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, சிரேஷ்ட உப தலைவர் |தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான தலைவரான ஆசிரி இத்தமல்கொட அவர்களும், Prime Land Residencies PLC நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிறுவன விவகாரங்களுக்கான பணிப்பாளரான எச்.எம். நளிந்த ஹீனட்டிகல அவர்களும் இது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, இதனை உத்தியோகபூர்வமாக்கியுள்ளனர். ஆசிரி இத்தமல்கொட அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “Prime Land Residencies நிறுவனத்தின் ‘The Palace’ உடனான எமது ஒத்துழைப்பானது இலங்கை மக்கள் அதிக எண்ணிக்கையில் ஆடம்பர இல்லங்களை சொந்தமாக்கிக் கொள்ளச் செய்வதில் எமது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. மிகவும் கவர்ச்சியான வட்டி வீதங்கள் மற்றும் நெகிழ்வுடனான மீள்கொடுப்பனவுத் தெரிவுகளுடன் ஒவ்வொருவருக்கும் தனிப்பயனாக்கம் செய்து நாம் வழங்குகின்ற வீட்டுக் கடன் தீர்வுகள், உயர் ரக விதிவிடமொன்றை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தமது கனவை எமது வாடிக்கையாளர்கள் இலகுவாகவும், சௌகரியமாகவும் நனவாக்கிக் கொள்வதை உறுதி செய்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
நவீன வாழ்வுமுறைக்கு உதாரணமாகத் திகழும் “The Palace” ஆனது ஒப்பற்ற வாழ்க்கைமுறையை வழங்குவதற்காக ஆறுதல், சௌகரியம் மற்றும் நேர்த்தி ஆகியவற்றின் கலப்பு வசதிகளுடன் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலமாக, 12% ஆண்டு வட்டி முதற்கொண்டு ஒப்பீட்டளவில் சிறந்த வட்டி வீதங்கள், நெகிழ்வுடனான மீள்கொடுப்பனவுத் திட்டங்கள், மற்றும் விரைவான அங்கீகார நடைமுறை ஆகியவற்றை வழங்கும் DFCC வங்கி, முன்னரை விடவும் இலகுவாக இதனை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள வழிவகுத்துள்ளது.
DFCC வங்கி வழங்கும் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட கொடுப்பனவுத் திட்டங்கள் ஒப்பற்றவை என்பதுடன், வீடுகளைக் கொள்வனவு செய்வதுடன் பொதுவாக தொடர்புபட்ட நிதிச் சுமையை இலகுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 03 ஆண்டுகள் வரையான மன்னிப்புக் காலத்தையோ அல்லது தமது அடுக்குமனை தம்மிடம் கையளிக்கப்படும் வரையிலோ வீட்டைக் கொள்வனவு செய்கின்றவர்கள் பயன்பெற முடிவதுடன், அவர்களுடைய மீள்கொடுப்பனவுகளில் பெருந்தொகையை ஒத்திப்போட அவர்களுக்கு இது இடமளிக்கின்றது. இக்காலப்பகுதியில் அசல் தொகையில் 10% ஐ மாத்திரமே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியுள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் திரட்டிய தொகைகளை மீள்கொடுப்பனவுகளாகச் செலுத்தும் தெரிவைக் கொண்டுள்ளனர். இதற்குப் புறம்பாக, கடன் தொகையில் 50% கடைசி தவணைக் கொடுப்பனவின் போது எஞ்சிய மதிப்புத் தொகையாக செலுத்த முடியும் என்பதால், நெகிழ்வும், கட்டுபடியும் மேலும் இலகுவாக்கப்படுகின்றன.