– அம்பாறையில் 5 புதுமுகங்கள்
– 88 வாக்குகளால் சிலிண்டர் தோல்வி
நடைபெற்று முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டமான அம்பாறை நிர்வாக மாவட்டத்தில் முன்னாள் எம்.பிக்களான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன், பைஸல் காசிம் ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
88 வாக்குகளால் புதிய ஜனநாயக முன்னணி தோல்வியைத் தழுவியதன் காரணமாக ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன் ஆகியோர் தங்களது வாய்ப்பை இழந்துள்ள நிலையில், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பைஸல் காசிம் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களுடன் மாவட்டத்தை கைப்பற்றியது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்டத்தை வெற்றிகொண்டுள்ளது.
அக்கட்சி ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 313 (146,313) வாக்குகளை பெற்று 4 ஆசனங்களை பெற்றுக் கொண்டது .
அடுத்ததாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46,899 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33 ஆயிரத்து 911 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி 33 ஆயிரத்து 632 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
மொத்தமாக 7 ஆசனங்களுக்காக 640 பேர் போட்டியிட்டார்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சியை விட ஆக 129 வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது.
இலங்கை தமிழரசுக் கட்சி 44,632 வாக்குகளையும் புதிய ஜனநாயக முன்னணி 33,544 வாக்குகளையும் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 7 பேரில் ஐவர் பாராளுமன்றத்திற்கு புது முகங்களாவர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியில் தெரிவான வசந்த பியதிஸ்ஸ, இலங்கை தமிழரசுக் கட்சியில் தெரிவான கவிந்திரன் கோடீஸ்வரன் ஆகிய இருவருமே பழைய முகங்களாவர்.
ஏனையோரான பிரியந்த விஜயரத்ன, மஞ்சுள ரத்நாயக்க முத்துமெனிகே ரத்வத்த, அஷ்ரப் தாஹிர், எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் பாராளுமன்றிற்கு புதுமுகங்களாவார்கள்.
அதற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் 4 சிங்களவர், 3 முஸ்லிம்கள் 1 தமிழர் என 7 எம்.பிக்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெரிவானவர்களில் அஷ்ரப் தாஹிர் நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளராவார். உதுமாலெப்பை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினராவார்.
அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேச வரலாற்றில் ஒரு தடவை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானவர் இரண்டாம் தடவை தெரிவாவதில்லை என்ற சரித்திரத்தை இம்முறை கோடீஸ்வரன் மாற்றியமைத்து மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்திற்கு தெரிவான எம். பிக்கள்
தே.ம.ச. (NPP)
வசந்த பியதிஸ்ஸ – 71,120
மஞ்சுள ரத்நாயக்க – 50,838
பிரியந்த விஜேரத்ன – 41,313
முத்துமெனிகே ரத்வத்த – 32,145
அ.இ.ம.கா. (ACMC)
எம்.எம். தாஹிர் – 14,511
ஶ்ரீ.ல.மு.கா. (SLMC)
மீராசாஹிபு உதுமாலெப்பை – 13,016
இ.த.அ.க. (ITAK)
கவீந்திரன் கோடீஸ்வரன் – 11,962
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்…
2024-Parliamentary-Election-Candidates-2405-50_E-மாவட்ட ரீதியில் 2024 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் – ஆசனங்கள்
பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667,240 வாக்குகள் நிராகரிப்பு
அதிகூடிய வாக்குகளால் வரலாற்றில் இடம்பிடித்த அமைச்சர் விஜித ஹேரத்
யாழ். வரலாற்றில் முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தி வெற்றிவாகை