இலங்கை பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் விருப்பு வாக்குகளைப் பெறுவதில் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய சாதனை படைத்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹாமாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் 7,16,715 வருப்பு வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய விருப்பு வாக்குகளைப் பெறுவதில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் 6,55,289 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இலங்கை தேர்தல் வரலாற்றில் பொதுத்தேர்தல் ஒன்றில் வேட்பாளர் ஒருவர் கொழும்பு மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட அதி கூடிய விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலி்ல் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 5,27,364 வாக்குகளை பெற்ற சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.