Sunday, November 24, 2024
Home » கல்விக்கான உதவி மூலம் விவசாய குடும்பங்களை வலுவூட்டும் C.W. Mackie

கல்விக்கான உதவி மூலம் விவசாய குடும்பங்களை வலுவூட்டும் C.W. Mackie

by sachintha
November 16, 2024 10:26 am 0 comment

தொழில்துறையில் ஒரு முன்னணி நிறுவனமான C.W. Mackie PLC நிறுவனத்தின் இலங்கையின் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களில் ஒன்றான Scan Jumbo Peanuts, அதன் விநியோகச் சங்கிலியின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயக் குடும்பங்களை வலுவூட்டும் நோக்கில் முக்கிய பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) முயற்சியான ‘ஸ்கேன் தரு திரிய’ திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அத்தியாவசியப் பாடசாலைப் பொருட்களை வழங்குவதன் மூலம் வெல்லவாய, எதிலிவெவ பகுதியில் உள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகின்றது. இந்த திட்டமானது, இலங்கையின் நிலக்கடலை விவசாயத் தொழில் துறையில் இணைந்துள்ள பெற்றோர்களுடைய குழந்தைகளின் கல்வி சார்ந்த சாதனைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த முயற்சி செய்கிறது.

நிலைபேறான அபிவிருத்தி மற்றும் விவசாய வலுவூட்டலுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட C.W. Mackie PLC இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மங்கள பெரேரா, “C.W. Mackie PLC எனும் வகையில் எமது தூரநோக்குப் பார்வையானது, எமது வணிகத்தின் வெற்றிக்கு அப்பாற்பட்டதாகும். உள்நாட்டுத் தேவைக்காக உள்நாட்டில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், ஏற்றுமதி மூலம் உலக சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்துவதற்கும், விவசாயத் துறையில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் நாம் உறுதி பூண்டுள்ளோம். இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகள் அவர்களது உற்பத்திக்கான சிறந்த விலையைப் பெறுவதை உறுதி செய்கிறோம். ஜம்போ நிலக்கடலை மூலம் ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் மேம்படுத்துவதற்கும், விவசாய உற்பத்தி நிறுவனங்களை ஆதரிப்பதிலும், விவசாயிகளின் குடும்பங்களின் கல்வியை மேம்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகிறோம். இதன் மூலம் விவசாயத் துறைக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறோம்.” என்றார்.

இந்த CSR திட்டமானது, C.W. Mackie PLC இன் நீண்ட கால பாரம்பரியத்துடன் இணைந்ததாக, அதன் விநியோகச் சங்கிலியில் இணைந்துள்ள சமூகங்களுக்கு ஆதரவளித்து, இலங்கையில் ஒரு பொறுப்பான கூட்டாண்மை நிறுவனமாக அதன் பங்கை வலுப்படுத்துகிறது. ஹொரணையில் உயர் தொழில்நுட்ப சிற்றுண்டி உற்பத்தி தொழிற்சாலைகளை ஆரம்பித்தமை உள்ளிட்ட விவசாயத் துறையில் இந்நிறுவனம் முக்கிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT