Sunday, November 24, 2024
Home » இறுகிய உள்ளம்

இறுகிய உள்ளம்

by Gayan Abeykoon
November 15, 2024 1:00 am 0 comment

அல்லாஹ்வின் நல்லுரைகளுக்கு எதிராக எவர்களுடைய உள்ளம் இன்னும் அதிகம் இறுகிவிட்டதோ அவர்களுக்குக் கேடுதான்!” (அல் குர்ஆன் 39:22)

திமிர் பிடித்து பாவம் செய்பவன் தனது உடல் வலிமையை நினைத்து ஏமாற்றத்திற்கு உள்ளாகிறான். “எவ்வளவு பாவம் செய்கிறேன். இறைவன் இன்னும் என்னைத் தண்டிக்கவில்லையே?!” என்கிறான். எத்தனையோ அத்தாட்சிகள் அவனைக் கடந்து செல்கின்றன. எதிலிருந்தும் படிப்பினை பெறாமல் அவனது உள்ளம் இறுகியிருக்கிறதே.

எத்தனையோ ஜனாஸாக்கள் அவனைக் கடந்து செல்கின்றன. ஆயினும் எந்தப் படிப்பினையும் பெறுவதில்லை அவன். மரணம் குறித்த எத்தனையோ குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் கேட்பான். ஆயினும் மனதில் எந்த சலனமும் ஏற்படாது.  ஓர் ஏழை அவனைக் கடந்து செல்வான். ஆயினும் உள்ளத்தில் இரக்கம் பிறக்காது. உள்ளம் உருகும் எத்தனையோ பயான்களைக் கேட்பான். ஆயினும் பாறைபோல் அசையாமல் இருப்பான். எத்தனையோ விபத்துக்களை கண்முன் பார்ப்பான். ஆயினும் மனம் திருந்தும் எண்ணம் ஏற்படாது.

இவற்றையெல்லாம் பார்த்த பின்னரும், “என்னை ஏன் இறைவன் தண்டிக்கவில்லை?” என்று கேட்டுக்கொண்டே இருக்கிறான்.

பேருரை, அறிவுரை, இடி, மின்னல், மழை, விபத்து, பேரிடர், மரணம், இளமை, முதுமை போன்றவை… மனிதன் பாடம் பெற இறைவன் கூறும் நல்லுரைகளே.  ஆயினும் இவற்றை சிலர் அலட்சியம் செய்கின்றனர்.

இவை மனித உள்ளம் இறுகியுள்ளதன் வெளிப்பாடாகும். ஆனால் மனித உள்ளம் மண்ணறை போன்று இறுகிக் கிடப்பதைவிட பெரிய தண்டனை வேறென்ன இருக்கிறது?! இப்னுல் கையும் (ரஹ்) கூறுகிறார்: ‘ஓர் அடியானின் இதயம் இறுகுவதை விட பெரிய தண்டனை வேறெதுவும் இல்லை’.

      அஸ்வர்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT