Sunday, November 24, 2024
Home » எமது பயணத்தில் வெற்றி அடைவோம்!

எமது பயணத்தில் வெற்றி அடைவோம்!

கார்த்திகை வீரர்கள் 35 ஆவது நினைவுதினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

by Gayan Abeykoon
November 15, 2024 2:45 am 0 comment

‘இ ன்று 35 ஆவது முறையாக கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த தினத்தை அனுஷ்டிக்க நாம் ஒன்றுகூடியுள்ளோம். நாம் இதற்கு முன்னர் எமது மாவீரர்களை நினைவு கூர்ந்தமை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைக்காகவே ஆகும். அதிகாரத்தைப் பெறுவதற்காக அவர்களினால் முன்னெடுக்கப்பட்டவற்றையும் தியாகங்களையும் உள்வாங்கிக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டிய நடவடிக்கையாக அமைந்தது’.

இவ்வாறு கொழும்பில் நேற்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

இன்று நாம் கார்த்திகை வீரர்களை நினைவுகூர்ந்து அனுஷ்டிப்பது அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டதற்கான முயற்சிக்காக ஆகும். இன்று நாம் முன்னைய காலகட்டத்தின் போது எதிர்கொண்ட சவால்களுக்கும் புதிய காலகட்டத்தின் சவால்களுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய தினம் கட்சியின் ஸ்தாபகர் தோழர் ரோஹண விஜேவீர, அரசியல் பீடத்தின் தோழர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் எந்த வகையிலாவது, எமக்கு ஒருநேர உணவு வழங்கியவர்கள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். ஆளும் நிர்வாக வர்க்கத்தின் இயல்பு, எம்மைப் பற்றிய அவர்களின் விரோதப் போக்கின் உண்மையான தன்மை, அவர்களைக் கொல்லும் அளவுக்குச் சென்ற ஒரு செயலில் இறங்குவதற்கு வழிவகுத்ததன் எதிர்மறையான போக்கின் உண்மையான நிலையை புரிந்து கொள்ள முடியும்

1978 ஆம் அண்டில் நாம் மீண்டும் மிகவும் அமைதியான முறையில் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்தோம். அந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் நாம் போட்டியிட்டோம். 1981 ஆம் ஆண்டு அபிவிருத்திச்சபைத் தேர்தலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்த போது, நாம் போட்டியிட்டோம். ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் போட்டியிட்டோம். தேர்தலை ஒத்திவைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதனால் அதற்கெதிராகப் போராடினோம்.

தேர்தல் களம் என்று பார்த்தாலும், ஜனநாயகத்திற்காக எழுந்து, அதன்படி உழைத்து, ஜனநாயகத்தை அடைய கடுமையாக எமது இயக்கம் உழைத்தது. அதுமட்டுமன்றி, தேர்தல் களத்தில் ஜனநாயகத்திற்காக நின்று, அதற்காக வலுவாகப் போராடி, ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாகச் செயற்பட்ட கட்சி எமது கட்சியாகும்.

அவ்வாறு செயல்பட்ட போது, 1983 இல் அவர்களினால் உருவாக்கப்பட்ட சம்பவங்களைப் பயன்படுத்தி நாம் தடை செய்யப்பட்டோம். அவர்கள் எம்மை வரையறுத்துக் குறிக்கப்பட்ட ஒரு பிரிவினராக குறிப்பிட்டு தடை விதித்தனர். எம்மை அரசியல் ரீதியாக தடை செய்யப்படுவதற்கு என்ன காரணம்? நாம் ஜனநாயகத்தை விட்டு வெளியேறி விட்டோமா? தேவையில்லாத மோதல்களை உருவாக்குவதற்கு வழி செய்தோமா? இல்லை.

அவர்கள் எம்மைத் தடை செய்வதற்குக் காரணம் எமது குறிக்கோள்கள்தான். இலக்கை அடைய நாம் தேர்ந்தெடுத்த பாதையில் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அதனால் எங்கள் இலக்குகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பெரும் ஆசை அவர்களுக்கு இருந்தது. அந்த நோக்கத்தைக் கண்டு அவர்கள் பயந்தார்கள்.

நாம் தெரிவு செய்ய இரண்டு வழிகள் இருந்தன. இலட்சியங்களைக் கைவிட்டு, இலட்சியத்திற்கான கடினமான பாதையைத் தேர்ந்தெடுப்பது, எமது பழைமை சகோதரர்களின் இலட்சியத்திற்காக அதற்கான வழியில் செயல்பட்டோம். அப்போது ஆளும் வர்க்கத்தின் தேவை எமது இலட்சியத்தை அழிக்க முடியாவிட்டால், அடுத்த கட்டமாக இலக்குகளை கொண்டிருந்தவர்களை கொல்வது அடுத்த நடவடிக்கையாக அமைந்திருந்தது. அப்போது நடக்கக் கூடாதவை நடந்தன. அந்த சம்பவங்கள் குறித்து பல விவாதங்கள் நடத்தப்பட்டன. அந்த தருணத்தில் எம்மால் ஏதேனும் சம்பவங்கள் நடந்தால், அந்த சம்பவங்கள் எங்களைக் கொன்று அழிக்கக் காரணமாவை அல்ல.

எம்மை கொல்வதற்கும் அழிப்பதற்கும் காரணம் எமது இலக்குகள்தான். இலக்கை கொண்டுள்ளவர்களை கொன்று அழிப்பதன் மூலம் மட்டுமே வெல்ல முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு அரசியல் இயக்கத்தின் நடுத்தர பிரிவினரை மட்டுமல்ல, ஏனைய பிரிவினரைக கூட கொல்ல அவர்கள் விரும்பினர். கடைசியில் ‘போட்டி முடிந்தது’ என்கிறார்கள். அதிலிருந்து, நோக்கம் முடிந்துவிட்டது, நோக்கத்தை சுமந்தவர்கள் முடிந்து விட்டார்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

1989 க்குப் பிறகு மீண்டும் அரசியல் பிரசாரத்தைத் தொடங்குகிறோம். நாம் மீண்டும் எழுச்சி பெற, இந்த நடவடிக்கையை மீண்டும் ஒரு வலுவான செயற்பாடாக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளே, நம்மைப் பாதித்தன.

இலக்குகள்தான் நமக்கு தைரியத்தையும், நம்மை உயர்த்தவும் வழி செய்கின்றன. நம் எண்ணத்தில் அழிக்கவோ அடக்கவோ முடியாத இலக்குகள் உள்ளன. இலக்குகளின் தாக்கமே நம்மை மீண்டும் எழுச்சி பெறவும், நம்மை ஒழுங்கமைக்கவும், மீண்டும் வெற்றிக்கான இயக்கத்தை வழிநடத்தவும் தூண்டுகிறது.

1994 க்குப் பிறகு மீண்டும் அரசியல் பயணத்தில் பிரவேசித்தோம். ஒரு கட்சியாக நாங்கள் பெரும் எழுச்சிகளை எதிர்கொண்டோம். தோல்விகளைச் சந்தித்தோம். இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், பிற்காலத்தில் தவறு செய்தோமோ என்ற மனஅழுத்தத்தை உருவாக்கின. பெரும் எழுச்சிகளுக்கு மத்தியிலும் நாங்கள் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்தோம். செப்டம்பர் 21 ஆம் திகதி, அந்தப் பயணத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் நாம் வெற்றியை அடைவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT