அம்பாறை மாவட்டத்தில் மப்பும் மந்தாரமுமான காலநிலையுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7.30 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகின. கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சவளக்கடை, நாவிதன்வெளி மத்திய முகாம், மண்டூர், சாய்ந்தமருது,மாளிகைக்காடு, சம்மாந்துறை, நிந்தவூர் ,பாலமுனை ,அட்டாளைச்சேனை இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் எவ்வித பிரச்சினைகளுமின்றி வாக்களிப்பு நடைபெற்றது.
வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுபட்டிருந்ததோடு தேர்தல் கண்காணிப்பாளர்களும் குறிப்பாக பெப்ரல் அடிக்கடி வருகை தந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை இம்முறை பாதுகாப்பு கடமையில் 90 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல் காலத்தில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் அவை தொடர்பாக அறிவிக்க O6 விசேட தொலைபேசிகள் வழங்கப்பட்டிருந்தன.
(நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்)