மதவாச்சியில் நேற்றுமுன்தினம் மாலை வயல் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிசார் தெரிவித்தனர்.
மதவாச்சி பொலிஸ் பிரிவின் திவுள்வெவ வயல் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குளிக்கட, மதவாச்சி பகுதியை வசிப்பிடமாக கொண்ட 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான விவசாயி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மின்னல் தாக்குதலில் பலியான நபருடய சடலம் தற்சமயம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அநுராதபுரம் தினகரன் நிருபர்