Sunday, November 24, 2024
Home » டொமினிக்கன் குடியரசின் அதியுயர் விருது பெறும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ​

டொமினிக்கன் குடியரசின் அதியுயர் விருது பெறும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ​

by Gayan Abeykoon
November 15, 2024 1:20 am 0 comment

ெகாமன்வெல்த் ஒஃப் டொமினிக்கா தனது உயரிய தேசிய விருதான டொமினிக்கா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

COVID-19 தொற்றின் போது கடந்த 2021, பெப்ரவரியில் இந்தியா, டொமினிக்காவுக்கு 70 ஆயிரம் டோஸ் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது. அத்தோடு, டொமினிக்காவின் சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக டொமினிக்கா அறிவித்துள்ளது.  இது தொடர்பாக டொமினிக்காவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி டொமினிகாவின் உண்மையான நண்பர். கொவிட் தொற்றின் போது சரியான நேரத்தில் அவர் டொமினிக்காவுக்கு உதவினார். இதுவரையிலான அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நாங்கள் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க உள்ளோம்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நவம்பர் 19 முதல் 21 வரை கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெறவுள்ள இந்தியா-காரிகாம் உச்சிமாநாட்டின் போது ​ெகாமன்வெல்த் தலைவர் டொமினிக்கா சில்வானி பர்ட்டன் இந்த விருதை வழங்குவார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT