Sunday, November 24, 2024
Home » பதுளை மாவட்டத்தில் இரு தமிழ் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு

பதுளை மாவட்டத்தில் இரு தமிழ் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு

- 6 ஆசனங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி வெற்றி

by Prashahini
November 15, 2024 2:12 pm 0 comment

பதுளை மாவட்ட 10ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி,தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களை கைப்பற்றி வெற்றியை தனதாக்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் ,புதிய ஜனநாயக முன்னணி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட,
சமந்த வித்தியாரத்ன – 208,247
கிட்ணன் செல்வராஜ் – 60,041
அம்பிகா சாமுவேல்- 58,201
ரவிந்து அருண பண்டார – 50,822
சுதத் பலகல்ல- 47,980
தினிது சமன்குமார – 45,902 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிட்ட,
நயன பிரியங்கர வாசலதிலக்க – 35,518
சமிந்த விஜயசிறி – 29,791 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட,
சாமர சம்பத் தசாநாயக்க -19,359 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

கடந்த இரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியில் போட்டியிட்ட இரு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைப் போன்று இம்முறை தேசிய மக்கள் சக்தியின் சார்பாக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ் , அம்பிகா சாமுவேல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளமை தமிழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் பெண் பிரதிநிதியாக அம்பிகா சாமுவேல் தெரிவாகியுள்ளமை மலையக பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.

பசறை நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT