தோட்டத் துறையின் சமூக கலாசார மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதில் உதவுவதற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) கவனம் செலுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய நிலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மதிப்பிடுவதற்கான திட்டத்தை மேற்கொள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
‘இந்த சமூகத்தினரின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான தரவுகளை சேகரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பு ஆலோசகர் மற்றும் ஆலோசனை நிறுவனத்தில் கவனம் செலுத்தியுள்ளதாக நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
பிராந்திய தோட்டக் கம்பனிகள், ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை, இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் சிறு தேயிலை தோட்டம் உட்பட அனைத்து தோட்ட முகாமைத்துவ நிறுவனங்களும் இந்த கணக்கெடுப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.பரிந்துரைக்கப்படும் எதிர்கால திட்டங்களுக்கான அடிப்படையாக இவை அமையும். அத்தோடு இந்த சமூகத்தினரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான உத்திகளை, குறிப்பாக வீதி பராமரிப்பு, நீர் வழங்கல் மற்றும் தோட்ட சமூகங்களுக்கான சுகாதார வசதிகளுக்கான திட்டங்களை பரிந்துரைக்கவும் வசதியாக அமையும் என ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.