தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 41 பேரை நேற்று கைது செய்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கைதானவர்களில் கற்பிட்டி மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்களும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்ட அவர் இவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பணம் வழங்கியமை, புகைப்படம் எடுத்தல், வாக்குச் சீட்டுக்களை கிழித்தல், தாக்குதல் போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ்செல்வநாயகம்