தேர்தலில் வாக்களிக்கச் செல்ல விடுமுறை வழங்காத நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் வாக்களிக்க விடுமுறை வழங்குவதில்லை என சிலரால் பெப்ரல் அமைப்பிற்கு கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு விடுமுறை வழங்குவதில்லை என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதன் படி அவ்வாறு எந்த நிறுவனமாவது வாக்களிக்கச் செல்லும் தூரத்தை கணித்து விடுமுறை வழங்காவிட்டால், அந்த நிறுவனத்தின் தலைவருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது ஒரு இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.