அமெரிக்க அரசாங்கத்தில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையைப் பிடித்துள்ளனர்.
ஜனாதிபதி பதவி, செனட் சபை, மக்களவை என அனைத்தும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
முன்னதாக வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியாக சேவையாற்றிய முதல் இரண்டு ஆண்டுகளில் டொனால்ட் டிரம்ப்பும் ஜோ பைடனும் அத்தகைய கட்டுப்பாட்டை அனுபவித்தனர். அதனால் ஜனாதிபதிக்கு நினைத்ததைச் செய்ய முடியும் என்பதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் தமது கொள்கைகளை விரைவாகச் செயல்படுத்த முனையலாம். ஆனால் குடியரசுக் கட்சியின் மிதவாத உறுப்பினர்கள் அவற்றை ஆதரிக்காமல் போகும் சாத்தியமும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிரம்ப், தலைமைச் சட்ட அதிகாரியாக மேட் கேட்ஸை நியமித்திருப்பதோடு இராஜாங்கச் செயலாளராக மார்கோ ரூபியோவையும் தேசியப் புலனாய்வு பணிப்பாளராக துள்சி கப்பார்ட்டையும் நியமித்துள்ளார்.