பசுபிக் பெருங்கடலில் தொலைதூர சொலமன் தீவுகளுக்கு அருகில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இராட்சத அமைப்பை விண்வெளியில் இருந்து பார்க்க முடிவதாக உள்ளது.
32 மீற்றர் நீளம் மற்றும் 34 மீற்றர் அகலம் கொண்ட இந்தப் பவளப்பாறை சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று நம்புவதாக நெசனல் ஜோக்ரபி சமூகம் தெரிவித்துள்ளது. இது பிரதானமாக பழுப்பு நிறத்தைக் கொண்டிருப்பதோடு வெளிர் மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு நிறமும் அதில் அடங்குகிறது.
பசுபிக் பெருங்கடலில் அதிகம் வெளிப்படாத பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபட்ட போதே குழுவைச் சேர்ந்த நெசனல் ஜோக்ரபி புகைப்படக் கலைஞர் ஒருவரினால் பவளப்பாறை அடையாளம் காணப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் பெருங்கடல் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பவளப்பாறைகளில் உயிர்கள் அழிவடைந்து வருகின்ற நிலையிலேயே இந்த கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது.