நுவரெலியா மாவட்டத்தில் இன்று மாலை 4 மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் 534 வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் நிலையமான நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
மேலும், 65 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு சுமூகமாக இடம் பெற்றதோடு, 70% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 08 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 308 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதோடு, 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
க.கிஷாந்தன்