ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக ேநற்று 43 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. பிற்பகல் 1 மணி நிைலவரப்படி மொத்தம் 46.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வமாக உள்ள நிலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருநதது.
ஜார்க்கண்ட்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார். இங்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13, நவம்பர் 20 என்று 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
ஜார்க்கண்ட்டை பொறுத்தவரை மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் 30 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.
20 தொகுதிகள் பழங்குடியினருக்கான தொகுதிகளாகும். நக்சலைட் நடமாட்டம் உள்ள இடங்களில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு என்பது நிறைவடைந்தது.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பொலிஸார், இராணுவ வீரர்கள், துணை இராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ஜார்க்கண்டில் மொத்தம் 2.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1.31 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 1.29 கோடி பேர். 11.84 இலட்சம் வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களித்தனர். வாக்குப்பதிவுக்காக 15,344 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.