சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி நேற்றுக்காலை கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து பொலிசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு பேருமே வடஇந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிசார் கைப்பற்றி கத்தி காய்கறி வெட்ட பயன்படுத்தப்படும் கத்தி ஆகும். இதில் தீயில் வாட்டிய அடையாளம் இருந்துள்ளது. இதனால் இதை தீயில் வாட்டி அதை சூடுபடுத்தி இருக்கலாம் எனத் தெரிகிறது.
அதன் பின் அதை கூர்படுத்தி இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமது தாய்க்கு சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்று கூறி இந்தத் தாக்குதலை விக்னேஷ் என்பவர் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மருத்துவர்கள் கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று அறிவித்துள்ளனர்.