பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“அதிமுக ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்று பாராமல் என்னை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி முதலமைச்சர் கடந்த சில நாட்களாக விமர்க்கிறார். அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று எடப்பாடி தெரிவித்தார். “முதல்வர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய மடலில் நான் அவரைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசியதாக கூறியுள்ளார். நான் முதல்வராக இருந்த போது ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது என்னைப் பற்றி தனிப்பட்ட வகையில் பல விமர்சனங்களை செய்துள்ளார். ஊர்ந்து, பறந்து எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது நடைபெற்ற கூட்டத்தில் கூட கரப்பான்பூச்சி என கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது பதவியையும் நிலையையும் மறந்து இதுபோன்ற விமர்சனங்களை செய்து வருகிறார்” என்று எடப்பாடி மேலும் தெரிவித்தார்.