வி.கே. டி பாலன் மறைவுக்கு இலங்கை எழுத்தாளர்கள், கலைஞர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாக அன்னாரின் குடும்பத்தாருக்கு கலாபூஷணம் மாத்தளை பெ. வடிவேலன் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
‘வி.கே.டி. பாலன் இலங்கை திராவிட இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார். சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கைகளை முன்னெடுத்த ஈ.வெ. ரா. பெரியார், தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரை ஆகியோரின் வழியில் வி.கே.டி. பாலன் செயற்பட்டார்.
எழுத்துவாண்மையும், பேச்சுத்திறனும் கொண்ட இவர், நாவலாசிரியராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் தமிழ்நாட்டில் சாதனை படைத்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கலை, இலக்கியத்துறை மட்டுமின்றி அறிவியல், கல்வித்துறையிலும் இவர் ஆற்றிய பணி மகத்தானது. ஈரோடு கலைக்கல்லூரி முதல் சுற்றுலாத்துறையிலும் பெரும் பங்கு கொண்டு இலங்கை கலைஞர்களின் பெருமையை தமிழ்நாட்டில் மட்டுமன்றி, பாரதத்திலும், உலகெங்கிலும் நிலைநாட்டியவர். மனிதநேயமும் மானிடப்பரிவும் மிக்க இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும். இவ்வாறு மாத்தளை வடிவேலன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கலாபூஷணம் மாத்தளை பெ.வடிவேலன்