யாழ்ப்பாணத்தில் மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாக்கெண்ணும் மத்திய நிலையமான யாழ். மத்திய கல்லூரிக்கு, வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் எடுத்து வரப்பட்டு, வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வாக்கெண்ணும் மத்திய நிலையத்தினை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் , வீதிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் வாக்களிப்பு நிலைமைகள் தொடர்பில் , தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்ட போது,
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 59.65 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் 62.05 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 60.85 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்கெண்ணும் மத்திய நிலையமான யாழ்ப்பாண மத்திய கல்லூரிக்கு வாக்கு என்னும் பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது மத்திய கல்லூரி சூழல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன
முன்னதாக தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகள் நிறைவடையும் போது அவற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
அத்துடன் இன்று (14) இடம்பெற்ற வாக்களிப்பின் வாக்கெண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வாக்கெண்ணும் பணிகள் முடிவடைய உடனுக்கு உடன் முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் வன்முறைகளோ சட்ட மீறல்களோ இடம்பெற்றதாக பதிவுகள் இல்லை
அதேநேரம் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
யாழ். விசேட நிருபர்