Sunday, November 24, 2024
Home » சட்டவிரோதமாக இரவில் சுழியோடிய 5 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக இரவில் சுழியோடிய 5 பேர் கடற்படையினரால் கைது

- ஆயிரத்திற்கும் அதிக கடலட்டைகள் மீட்பு

by Rizwan Segu Mohideen
November 14, 2024 1:50 pm 0 comment

மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்கரைக்கு அருகில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இரவு நேரத்தில் சுழியோடி கடலட்டை பிடித்த 5 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு கடந்த வேளையில் கடல் அட்டைகளை பிடிப்பதற்காக சட்டவிரோதமான முறையில் சுழியோடிய 5 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, சட்டவிரோதமாக அறுவடை செய்யப்பட்ட 1,055 கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.

வங்காலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ​​வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவிற்கு உட்பட்ட SLNS புஸ்ஸதேவ பிரிவினால், இரவு நேரத்தில் சட்டவிரோதமாக பிடித்த 604 கடல் அட்டைகளுடன் 3 பேரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, சிலாவத்துறை கடற்கரைப் பகுதியில் SLNS தேரபுத்த மேற்கொண்ட இதேபோன்ற நடவடிக்கையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 451 கடல் அட்டைகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இந்த நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 1,055 கடல் அட்டைகளுடன் 5 சந்தேகநநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 – 68 வயதுக்குட்பட்ட வங்காலை மற்றும் சிலாவத்துறையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடல் அட்டைகளுடன் சந்தேகநபர்கள் மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் மற்றும் சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகர் ஆகியோரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT