முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது.
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்று (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதிய தலைவர்களை தெரிவு செய்ய அமைதியான முறையில் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்களிக்க தகுதிபெற்ற 86,869 பேர் வாக்களிக்கின்றனர். அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1500 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள், 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஈடுபட்டுள்ளதுடன் தேர்தல் கடமையில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
ஓமந்தை விஷேட நிருபர்