உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பிரிட்டன் தொலைக்காட்சி செனல் 4இல் ஒளிபரப்பப்பட்ட காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த முறைப்பாடு, பொலிஸ் தலைமையகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து அதற்கான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மொஹமட் மஹீலால் மொஹமட் ஹன்சீர் அல்லது அசாத் மௌலானாவுடன் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை அந்த நேர்காணலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் இது நடைபெற்றுள்ளது.
இதற்கமைவாக இந்த காணொளியிலுள்ள உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள், குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சதி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.