செலிங்கோ லைஃப் நிறுவனமானது இலங்கையின் 25 சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக நாட்டின் முதன்மையான வர்த்தக இதழான LMD ஆல் கௌரவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களாக LMDயின் வெவ்வேறு வருடாந்த தரவரிசையில் சிறந்த தரவரிசையில் உள்ள நிறுவனங்களுக்கிடையில் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் நிலையான இருப்பை அங்கீகரிக்கும் முகமாக சஞ்சிகையின் 30வது ஆண்டு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
அண்மையில், செலிங்கோ காப்புறுதியானது 2024 ஆம் ஆண்டிற்கான LMD இன் ‘இலங்கையில் மிகவும் கௌரவத்துக்குரிய நிறுவனங்கள் தரவரிசை காப்புறுதி பிரிவில் மிகச்சிறந்த இடத்தை பிடித்ததுடன் மேலும் சஞ்சிகையின் ‘மூவர்ஸ் அண்ட் ஷேக்கர்ஸ பட்டியலில் 2023 ஆம் ஆண்டில் 52 வது இடத்திலிருந்து ஒட்டுமொத்த தரவரிசையில் குறிப்பிடத்தக்க 35 இடங்கள் முன்னேறி 2024 ஆம் ஆண்டில் 17 வது இடத்தினை பெற்றுள்ளது. செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு துஷார ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ‘மாற்றங்களுக்கு மத்தியில் நீடித்து நிலைப்பதென்பது நிதிச் சேவைத் துறையில் மிக முக்கியமான வலிமையாகும்.