மனித உரிமை சட்டத்தரணி கின் யொங்பீ ஐந்தாண்டு சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டு சீனாவின் தன்னாட்சிப் பகுதியான குவான்ஹி மாகாணத்தில் உள்ள நானிங்கிற்கு திரும்பியுள்ளார்.
சீனாவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் சட்டப்பூர்வ வாதங்களை மேற்கொண்டார். இதன் பிரதிபலிப்பாக அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.
முன்னணி சட்டத்தரணிகள் சங்கம் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதவில் , “அக்டோபர் 31 அன்று, மனித உரிமை சட்டத்தரணிகின் யொங்பீ ஐந்தாண்டு சிறைத்தண்டனையை முடித்து, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். குவான்ஹி மாகாணத்தில் உள்ள நானிங்கிற்கு அவர் திரும்பியுள்ளார்.கின் யொங்பீ ஒரு புகழ்பெற்ற மனித உரிமை சட்டத்தரணி ஆவார்.அவரது அமைதியான மற்றும் சட்டபூர்வமான மனித உரிமைப் பணிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவரது சிறைவாசம் அமைந்தது என்று நாங்கள் நம்புகிறோம்.
பேச்சுச் சுதந்திரம் மற்றும் அரசியல் கருத்துச் சுதந்திரம் என்பன பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சீனாவில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை இந்த வழக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கின் யொங்பியின் சட்ட சிக்கல்கள் 2019 இல் தொடங்கியது. அவர் சீன அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சித்ததற்காக “அரச அதிகாரத்தை சீர்குலைக்க தூண்டுதல்” என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவரது வழக்கு, ஆரம்பத்தில் நானிங் உள்ளுராட்சி பொதுப் பாதுகாப்புப் பணியகத்தால் கையாளப்பட்டது.மேலும் மறுஆய்வுக்காக 2020 இல் நான்னிங் உள்ளுராட்சி மக்கள் சட்டத்தரணி பிரிவுக்கு மாற்றப்பட்டது.பின்னர் நான்னிங் இடைநிலை மக்கள் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக அவரது சட்டத்தரணி லி குயிஷெங் இந்த நேரத்தில் அவரைச் சந்திப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2023 மார்ச் 31 ஆம் திகதி, நான்னிங் இடைநிலை நீதிமன்றம் கின் மீது “அரசு அதிகாரத்தைத் தூண்டியதாக” குற்றம் சாட்டி அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அவரது சட்டக் குழு குவாங்சி மாகாணத்தின் உயர் மக்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போதிலும், இடைநிலை நீதிமன்றத்தின் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
முன்னணி சட்டத்தரணிக் சங்க குழு அவரின் விடுதலையில் நிம்மதியை வெளிப்படுத்தியது. ஆனால் சீனாவில் ஆர்வலர்கள் எதிர்கொள்ளும் பரந்த கவலைகளை வலியுறுத்தி, “அவரது விடுதலையைக் கேள்விப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், சீனாவில் உள்ள மனித உரிமைப் பாதுகாவலர்கள் பழிவாங்கலுக்குப் பயப்படாமல் தங்கள் முக்கியமான வேலையைச் செய்ய சுதந்திரமாக இருக்க வேண்டும். ” சீனாவில் அரச அதிகாரத்திற்கு சவால் விடுபவர்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடுபவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களின் அடையாளமாக அவரது வழக்கு மாறியுள்ளது.
சீனாவின் சிவில் உரிமைகள் நிலை மற்றும் அதன் மனித உரிமை சட்டத்தரணிகள் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ANI)