அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வோல்ட்ைஸ நியமிக்க டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ட்ரம்ப்பின் விசுவாசியாவார்.
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ட்ரம்ப் எதிர்வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாகப் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் உயர்பதவிகளுக்கான நியமனங்களைத் தற்போது ட்ரம்ப் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வோல்ட்ஸை நியமிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும், அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் ஆப்கானிஸ்தானுக்கான பாதுகாப்பு கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றியவராவார்.
அதேநேரம் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக எலீஸ் ஸ்டெபானிக்கை டிரம்ப் நியமித்துள்ளமையும் தெரிந்ததே.