114
சுற்றுலா நியூசிலாந்து அணியுடனான 2ஆவது T20 போட்டியின்போது உபாதைக்குள்ளான வனிந்து ஹசரங்கவிற்கு பதிலாக துஷான் ஹேமந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) தம்புள்ளையில் இடம்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் பந்துவீசும்போது இடது தொடை தசையில் காயமடைந்த வனிந்து ஹசரங்க நியூஸிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது அவர் கொழும்பு திரும்பியுள்ளதோடு, உயர் செயற்றிறன் மையத்தில் (High Performance Center) காயம் தொடர்பான சிகிச்சைக்கு உட்படுத்த்பட்டுள்ளார்.