கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் குலுங்கின. மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து வெளியே வந்து வீதிகளில் காணப்பட்டனர். இந்நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் பார்ட்டோலோம் மாசாவின் கடற்கரை பகுதியில் தெற்கே 40 கிலோ மீற்றர் தொலையில் ஏற்பட்டுள்ளது. என்றாலும் கியூபாவின் மிகப்பெரிய நகரான சான்டியாகோ டி கியூபாவிலும் இது உணரப்பட்டுள்ளது. மேலும் ஹோல்யின், குவான்ந்தனமோ போன்ற நகர்களிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அதேநேரம் கியூபாவுக்கு அருகில் உள்ள ஜமைக்கா தீவிலும் இந்நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலோன் என்ற சிறிய கிராமத்தில் உள்ள வீடுகளில் பாதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்த சில மணி நேரத்தில் பார்ட்டோலோம் மாசா கடலுக்கு அடியில் 22 மைல் ஆழத்தில் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.