பெருவெடிப்பு தொடர்பில் இன்றைய விஞ்ஞானிகள் கூறுகின்ற கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல் குர்ஆன் கூறியுள்ளது. ஆரம்பத்தில் இப்பிரபஞ்சம் முழுவதும் ஒரேயொரு சிறிய பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச் சிதறியதால் அதன் துகள்கள் புகை மண்டலமாகப் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பின்னர், அந்தத் துகள்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு சூரியனாகவும் இன்ன பிறக் கோள்களாகவும், துணைக் கோள்களாகவும், கோடானு கோடி விண்மீன்களாகவும் உருவாயின.
இன்றைய அறிவியல் உலகின் பெரு வெடிப்புக் கொள்கையும் அதனையே கூறுகிறது. இது தொடர்பில் அல் குர்ஆனில், ‘வானம், பூமி அனைத்தும் ஒரே பொருளாக இருந்து அதை நாமே பிளந்தெடுத்தோம் (அல் குர்ஆன் 21:30) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஏற்பட்ட புகை மண்டலமும் அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்கள் உருவாக்கப்பட்டதையும் அல் குர்ஆன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது.
‘பின்னர் வானத்தைப் படைக்கக் கருதினான். அது ஒரு வகை புகை தான். அதனையும் பூமியையும் நோக்கி ‘நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி (வழிபட்டு) என்னிடம் வாருங்கள். என்று கூறினான். அதற்கு அவைகள் ‘இதோ நாங்கள் விருப்பத்துடனேயே வந்தோம்’ என்று கூறின.’ (அல் குர்ஆன் 41:11).
இதையே இன்றைய அறிவியல் உலகமும் கூறுகிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாகத் அல் குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும். எனவே அல் குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.
இந்த 41:11 என்ற வசனம் வானம் புகையாக இருந்ததாகக் கூறுகிறது. அதன்படி இது 21:30 வசனத்தில் கூறப்படும் நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்டதாகும். அதாவது, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரு சிறு பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்துள்ளது. திடீரென அது வெடித்துச் சிதறியதால் அதன் துகள்கள் புகை மண்டலமாகப் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பின்னர், அந்தத் துகள்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு சூரியனாகவும், இதர கோள்களாகவும், துணைக் கோள்களாகவும், விண்மீன்களாகவும் உருவாகியுள்ளன.
இந்த இரண்டு வசனங்களும் அல் குர்ஆன் இறைவனின் வசனங்கள் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டுக்களாகும்.
அபூ முஷீரா…