34
-முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லையென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நேற்று கருத்து தெரிவிக்கையிலே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் குறிப்பாக சந்திரிகாவின் பாதுகாப்பு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை.ஏற்கனவே இருந்தோரில்,30 வரை குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். அது தவறு,அவருக்கு தற்போது 57 பேர் வழங்கப்பட்டுள்ளனர்.