நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது. முதலில் இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் பிறகு அமெரிக்காவுக்கு சென்றார். மகனின் ஆசைக்காக நெப்போலியன் அங்கேயே செட்டிலும் ஆகிவிட்டார்.மேலும் ஒரு ஐடி கம்பெனியையும் நடத்திவருகிறார். விரைவில் தனுஷின் திருமணம் ஜப்பானில் நடக்கவிருக்கும் சூழலில் நெப்போலியன் போட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
நெப்போலியன் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருந்தவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் பிஸியாக இருந்த அவர் திடீரென அரசியலுக்குள் நுழைந்து எம்.பியாகவும் மாறினார். இப்படி சினிமா, அரசியல் என பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தவருக்கு மகன் தனுஷுக்கு வந்த தசை சிதைவு நோய் அவரை மாற்றியது. இந்தியாவில் வைத்து ஏகப்பட்ட சிகிச்சைகளை மகனுக்கு கொடுத்தார் நெப்போலியன். ஆனால் சரியாக வரவில்லை.
அமெரிக்காவில் செட்டில்: அதனையடுத்து தனுஷின் ஆசைக்கிணங்க அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நெப்போலியன் அங்கேயே செட்டிலாகி ஒரு ஐடி கம்பெனியையும் நடத்திவருகிறார். அதனை தனுஷ்தான் கவனித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மகனை நெப்போலியன் பார்த்துக்கொள்ளும் முறையை கவனித்த ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடிவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. எழுந்த விமர்சனங்கள்: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனுஷை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதனையடுத்து திருமணம் அமெரிக்காவில் நடப்பதாக இருந்தது. ஆனால் அங்கு குடியுரிமை பிரச்சினை வரும் என்பதால் ஜப்பானில் திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்காக தனது குடும்பத்துடன் அவர் ஜப்பான் சென்றிருக்கிறார்.
தனுஷின் திருமணம் மிக விரைவில் நடக்கவிருக்கிறது. நிச்சயமாக தனுஷின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பகிர்ந்திருக்கும் நெப்போலியன், ”அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
எனது மகன் தனுஷின் திருமணத்துக்காக உறவினர்கள், விருந்தினர்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். நெகட்டிவ் பேச்சுக்கள் என்னை பெரிதாக எதுவும் செய்யவில்லை. சொல்லப்போனால் அது எனக்கு மோட்டிவேஷனாகத்தான் இருக்கிறது. அப்படி பேசியவர்களிடம் நான் ப்ரூவ் செய்து வென்று காட்டியே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.
அதை ப்ரூவ் பண்ணிட்டு உங்களிடம் வந்து பேசுகிறேன். என்னைப் போல் இருக்கும் நிறைய பேர் அதை செய்ய முடியாது இதை செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். அதெல்லாம் கேட்கவே கூடாது. விட்டுக்கொடுக்காமல் முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.